---குப்பிழான் ஐ.சண்முகன்
‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற கவிதையோடு தொடங்கி ‘ஆர்ப்பரிக்கும் என் கடல’; என்ற கவிதையோடு நிறைவுறும் த.அஜந்தகுமாரின் இந்தக் கவிதைத் தொகுப்பில் எல்லாமாக முப்பத்தெட்டுத் தலைப்புகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கவிதைகளின் பேசுபொருள் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், கவிஞன் தன்னைப் பற்றி தன் கவிதைகளைப் பற்றி கூறிய சிலவற்றைப் பார்த்தல் வேண்டும்.
“ அக்காலத்தில் புதிதாக ஒரு சொல் எனக்குக் கிடைத்தாலே போதும், அதனோடு பொருந்தும் எதுகை மோனைகளோடு கவிதை படைத்துவிடுவேன். இப்போதும் சொற்களின் முதான பித்தும் பிரியமும் பெருகியபடியே இருக்கிறது. சொற்கள் ஒரு பாற்கடலாய் என் முன் விரிந்து அலையெறிந்தபடியே இருக்கின்றன. என் அனுபவ உடலோடு அதில் இறங்குகையில் இனம் புரியாப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது. மீண்டு வருகையில் குளித்து முடித்த பின் எஞ்சும் நீர்த்துளிகளாய் சில சொற்களே என்னோடு எஞ்சுகின்றன. நானும் என் அனுபவங்களும் சொற்களோடு போராடித் தோற்றபடியே திரும்ப வேண்டியிருக்கிறது. எனினும் சொற்களின் யாசகனாய் என் அனுபவங்களோடு தொடர்ந்தபடியே இருக்கிறேன்”
“இதிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் 2004 -2009 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. என்இ பல்கலைக்கழக வாழ்வுக்கவிதைகள் என்றுகூடச் சொல்லலாம். தன்னுணர்;ச்சிக்கவதைகளாயே பல கவிதைகள்”
“ பல துயரங்களை அவலங்களை என் மொழியில் எழுதிவிட முடியவில்லை”
என் துயரை மொழியில் அப்படியே இறக்கிவிட முடியவில்லை. எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாத கவிதைகளே அதிகம்”
கவிஞனின் தன்னைப் பற்றிய இப்பிரகடனங்களின் வெளிச்சத்தில் அஜந்தகுமாரின் கவிதைகளை இவ்வாறு பார்க்கலாம்.
ஐ. காம்பீரியமான – தனித்துவமான – மாயக்கவர்ச்சி காட்டும் சொற்களினூடு விரியும் அனுபவங்கள்
ஐஐ. வெளியே கோலங்காட்டாது – ஓவென்று கத்திக் குழறி ஆர்ப்பரிக்காது – மனதிற்குள் மௌடீகமாக குழறி அழுகின்ற இதயத்தைக் கசக்கிப் பிழியும் துயரங்கள்.
அனுபவங்கள் சொற்களால் அடுக்கி எழுப்பும் கட்டுமானத்திலேயே கலைநேர்த்தி கூடுகின்றது. மொழியால் எழுதும் எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்துமாயினும் கவிதைக்கே இது சிறப்பானதும் முக்கியமானதாகும். அஜந்தகுமார் சொற்களை நேர்த்தியாக அடுக்கிக் கட்டுகிறார். அவற்றில் தன் அனுபவங்களை உணர்வுகளைப் பொதிந்து வைக்கிறார். சொற்களி;ன் யாசகனான அவருக்கு சொற்கள் பணிந்து வளைந்து அவரிட்டபடியே பேசுகின்றன. சொற்களின் ஊடாக உணர்வின் உச்சத்தைக் கட்டி எழுப்புகிறார். சாதாரண சொற்களின் கட்டுமானத்தில் அசாதாரண உணர்வுகளின்….. விகசிப்பு.
“ எதிலுமோர் நிழலின் தோற்றம்
தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது”
“ புதிர்ப் பொழுதுகளைத் திணித்தே
போய்க் கொண்டிருக்கிறது வாழ்வு”
“ புதிரெறிந்து என்னோடு உலாவுகிறது
நிழல்களின் நீட்சி”
“ எனது சங்கடங்களின் தருணங்களில்
தொண்டைக்குள் நெளியும் புழுக்கள்”
“ நிலத்தின் மீது
கவிதை எழுதிக்
கரைகிறது மழை”
அஜந்தகுமாரின் பெரும்பாலான கவிதைகள் இன்னதென்று இனங்காண முடியாத துயரத்தையே பேசுகின்றன. வாழ்வின் இழைகள் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு துயரம் பின்னியிருக்கின்றதா? ஒவ்வொரு அனுபவமும் அல்லது அனுபவத்துக்கு அப்பாலான கணங்களும் துயரமானதா? துயர் தோய்ந்த வாழ்க்கை …. அல்லது வாழ்வின் துயர், இதுவே அஜந்தகுமாரின் கவிதைகளில் ஊடுருவி நிற்கும் பாடுபொருள். சில கவிதைகளில் ஆங்காங்கே மின்னல்களாய் வாழ்வின் மீதான நம்பிக்கைக் கீற்று ஒளிர்ந்தாலும் ஏமாற்றங்களாலும், வஞ்சனைகளாலும், எதிர்பாராத நிகழ்வுகளாலும், அநியாய- அட்டூழியங்களாலும் (போர்ச்சூழலினாலும்), ஏற்படுகின்ற நம்பிக்கை வரட்சி….அது தொற்றிய துயரங்கள்….”துயரின் துயரான துயரில் வளைகிறது வாழ்க்கை”.
“ நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்
ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது
திணறும் கணங்கள்…”
“ வானிடிந்து வீழும் கணம் போல
நானும் நசுங்கிக் கிடந்து
நலிவுறுதல்….”
“ ஓர்மம் வடிந்து
ஒன்றிலும் குன்றாது
ஒடுங்குகிறது வாழ்வு...”
“ துயரின் நிலைத்த வாழ்வில்..”
“ சுயத்தின் தற்கொலை
சொல்லமுடியா
மொழிகளின் உடலில்…”
“காத்திருத்தல்
கானலென்ற உண்மையை…”
“ வாழும் சூழல்
என்னை அமத்திப் பிடித்து
அச்சுறுத்தல் செய்கிறது”
இஇருள் மண்டிக் கிடக்கும்
நீண்ட வீதிவழி
பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம்”
எனது
அகால மரணம் குறித்த
அதீத அச்சமொன்று
என்னுள் ஒளித்திருந்து…”
“ அதிகாரத்தின் வெம்மை
நெஞ்சுக்குள் பரவி
நெஞ்சுமயிர்களைப் பிடித்திழுக்கிறது”
“ சிரிப்புகள் வரண்ட
உதடுகளைச் சகிக்கமுடியாது….”
“ எல்லோரிடமும் பூத்துக்குலுங்கும் புன்னகை
என் முகம் கண்டதும்
ஓடிக்கொள்கிறது”
“ யாரையும் எளிதில் நம்ப முடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது”
சொல்ல முடியாத் துயர்
விழிகளில் இரத்தமாய்க் கசிய…”
இப்படி இப்படியே இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏன் இந்தத் துயரம்? பதின்ம வயதுகளைக் கடந்த - பல்கலைக்கழகத்தில் தன்னை ஒத்த சகபாடிகளுடன் படிக்கின்ற இளைஞன். அவனும் பல்கலைக்கழக மாணவனே ஆயினும் பெரும்பாலான சகபாடிகளினின்றும் சற்று வித்தியாசமானவன். கவிதா உணர்வு மிக்கவன். அவன் வாழ்வின் ஒவ்வொரு கண நிகழ்வுகளினாலும் பாதிக்கப்படுபவன்.
“கவிதைக்கான கருக்கள் ஒவ்வொரு பயணங்களிலும், ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு நினைவுகளிலும், ஒவ்வொரு கனவுகளிலும் ஏதோவொரு வகையில் கிடைத்தபடியே இருக்கிறது” என்று அவனே எழுதுகிறான். கொடுமைகள் நிறைந்த கொடிய போரின் நெருக்குவாரச் சூழலில் … நாலைந்து வருட பல்கலைக்கழக வாழ்க்கை. கனவுகள் பூத்துக்குலுங்குகின்ற பருவம்: கனவுகள் சிதைந்து போகின்ற காலக் கொடுமை. ஆற்றாமைகளும், சுய(ம்)இழப்புகளும் - நேசமானவர்களைப் பிரிகின்ற வேதனைகளுமாய்….துயர் தோய்;ந்த வாழ்க்கை. ‘ என் துயர் -மற்றவன் துயர், என் துயர் சமூகத்தின் துயர்’ என நம்பும் அஜந்தகுமார் தன் துயரைப் பாடுகின்றான்: தனது சகபாடிகளான மற்றவன் துயரைப் பாடுகின்றான்: சமூகத்தி;ன் துயரைப் பாடுகின்றான். “துயரங்களால் புனையப்பட்ட இனிய கவிதைகள்: இனிய பாடல் ராகமுடையது” என்கிறார் ஆங்கிலக்கவி ஷெல்லி. ஒரு வகையில் அவரது நாலைந்து வருட பல்கலைக்கழக வாழ்வின் - நிகழ்வுகளின் துயர் தோய்ந்த கவித்துவமான பதிவுகளே இக்கவிதைத் தொகுப்பு எனலாம்.
அஜந்தகுமாரின் தொகுப்பிலுள்;ள எல்லாக் கவிதைகளும் வசன கவிதைகளே. (ஒளிப்பிழம்பை வினாவுதல் என்ற கவிதையில் கவியரங்கக் கவிதையின் சாயல் படிந்திருக்கிறது.) செயற்கைத்தனமான எதகை மோனைகளுடனான செய்யுள் மரபில் இருந்து அவர் விடுதலையாகி, உணர்வுகள் செறிந்த உரைநடையை ஊடகமாகக் கொண்டுள்ளார். வாக்கியங்களை முறித்து முறித்து அடுக்குவதனூடாககவிதையின் உருவத்தைக் கட்டி எழுப்புகின்றார். உதாரணமாக தொகுப்பின் தலைப்புக் கவிதையும் முதற் கவிதையுமான ‘ஒரு சோம்பேறியின் கடல்’ : “கடற்கரை மணலுள் புதைந்து, திமிறி நடக்கும் கால்கள்: நீ என் கைபிடித்தபடி ஓடுவதுபோல் பாய்ந்து பாய்ந்து நடக்கிறாய். நீ முன்னேயும் கொஞ்சம் நான் பின்னேயும் நடக்கிறோம்விரிந்து கிடக்கும் கடல்: வாவென்று. ஓடி வந்து நக்கி; நனைக்கும் அலைகள். நீ இப்போதென் மார்புள் புதைந்து உயிர் தடவுகிறாய். நான் கடலைப் பார்த்தபடியே இருக்கிறேன்….இப்படியே நீண்டு செல்லும் கவிதை.
இந்த உதாரணத்தின் ஊடாகவே அஜந்தகுமாரின் இன்னுமோர் அம்சத்தை எடுத்துக் காட்டலாம். கதைப்பாடல்கள்: கதை சொலல்வது போல அல்லது கதை சொல்வதாக விரியும் கவிதை. சங்ககாலத்தின் தன்னுணர்ச்சிக் கவிதைகள் போல: குறிப்பாக கலித்தொகைப் பாடல்கள் போல சிறு – கதைக் கவிதைகள். ‘ நடுச்சாமம்: திடுக்கிட்டு விழித்தேன். என்னைத் தட்டி எழுப்பிய திமிரோடு கத்திக் கொண்டிருந்தது பூனை. பசியாலோ குட்டி ஈன்றதாலோ , இருக்கப்படாத வியாதியாலோ அது கத்திக் கொண்டிருக்கலாம். படுத்திருந்தபடியே கலைத்துப் பார்த்தேன் . ஆத்திஜரம் தாங்காமல் தலையணையைத் தூக்கி அதன் மேல் எறிந்தேன்…………. இப்படியே.
இவற்றின் தொடர்ச்சியான இன்னொரு அம்சத்தையும் அஜந்தகுமாரின் பெரும்பாலான கவிதைகளில் காணலாம். இவர் தனக்குகள்ளே தான் பார்க்கும் அல்லது தன்னையே பார்க்கும் ‘அகமுகி’யாகவே தன்னுடைய கவிதைகளை எழுதுகின்றார். அதாவது இவரது கவிதைகள் ‘நான்’ என அல்லது ‘என் -எனது’ என தனது பார்வைகளையே – தனது அல்லது தான் உள்வாங்கிக் கொண்ட அனுபவங்களையே பேசுகின்றன. சும்மா இருக்கிறேன், பல்லி+வீடு+நான்+அவள், எனக்கான விசேட ஒளிபரப்பு,உன் தவறும் என் சக்தியும், என்னிலிருந்து வெளியேறும் ஒருவன், உருக்குலைந்த என் கவிதைகள், என்னுள் நவீன ஓவியம், நீயெனக்கு இல்லையென்றான இந்த இரவு,ஆர்ப்பரிக்கும் என் கடல் ஆகிய இவரின் கவிதைத் தலைப்புகளையே இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். கவிதைக்குள்ளே போனால்,
“எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப்படலாயிற்று…..”
“வகுப்பறையில்
வண்ணத்துப்ப+ச்சி அமர்ந்திருந்த போது
அதன் சிறகுகளில் இருந்து
வானில் விரியத் தொடங்கினேன்…. “
“நான் எழுத நினைத்த கவிதை
எழுதப்பட்டதான
உனது விமர்சனம் முன்
உன்னை ஒன்று கேட்பேன்”
“பறப்பதற்கு துடிக்கின்றன
எனது சிறகுகள்……”
என்னோடு கைகோர்த்து
கதைத்தபடி கடைக்குச்
சாப்பிட வந்தவள்….
யாரையும் எளிதில் நம்பமுடியாத
அபத்தம் எண்ணி
என் மனம் அழுகின்றது
என்றெல்லாம் எழுதிச் செல்கிறார். இவரின் கவிதைகளில் ஆங்காங்கே எமது நடப்பு வாழ்வின் காட்சிகளும், நிகழ்வுகளும் கோலங் காட்டுகின்றன.
“ ஊர்க் கோழிகள்
கிண்டிக் கிளறிய
குப்பைகளைக்
காற்று காவித் தெரிகிறது…”
என்று ஒரு கவிதையிலும்,
“ நேற்று சுடப்பட்டு இறந்து போனவனின்
மூச்சின் இறுதி இழை
காற்றில் வருகிறது கலந்து.
ஈக்கள் அவன் மூக்கிலும் வாயிலும்
இரத்தம் கொட்டிய இடத்திலும்
மொய்த்துக் கிடந்து…….”
என்று வேறோர் கவிதையிலும் இவ்வாறே வேறுவேறு கவிதைகளிலும் எழுதிச் செல்கின்றார்.
இதுவரை நான் எழுதியவை எல்லாம் இவரது கவிதைகளில் நான் கண்டுணர்ந்த – அனுபவித்த அம்சங்களில் சில மட்டுமே. நான் கண்டும் சொல்லாமல் விட்டவையும், சொல்ல முடியாமல் விட்டவையும் இவற்றுக்கு மேலாக என்னால் கண்டு கொள்ளமுடியாமல் விட்டவையும் பல உள. குறிப்பாக இக்கவிதைகள் பேசும் மறைபொருளை, ப+டகப்பொருளை, குறியீட்டுப் பொருளை , படிமங்களைப் பற்றி நான் எதுவுமே பேசவில்லை. ‘எழுதப்பட்ட கவிதைகளைக் காட்டிலும் எழுதப்படாத கவிதைகளே அதிகம்’ என்று கவிஞன் தன் பிரகடனத்தில் கூறிய மாதிரி நானும் முடிக்கிறேன். இக்கவிதைத் தொகுப்புப் பற்றி நான் எழுதியவற்றைக் காட்டிலும் எழுதப்படாதவைகளே அதிகம். ஆகவே நண்பர்களே இத்தொகுப்பைக் கருத்தூன்றிப்படியுங்கள். படித்தால்தான் கவிஞனின் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தைக் காண்பீர்கள்.
முடிவாக ஒரு வார்த்தை: அழகான தயாரிப்பில் கைக்கு அடக்கமாக, தெளிவான அச்சுப்பதிப்பில் வந்திருக்கும் இந்நூலில், அப+ர்வமாகக் காணப்படும் ‘கருத்தைப் பிறழ வைக்கும் ‘ அச்சுப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
பிற்சேர்க்கை: இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கவிதைகள் -
நீயெனக்கு இல்லையென்றான இந்த இரவு, ஒரு தேவதையின் ஒளிக்கவிதை,( சில உறுத்தல்கள் இருந்த போதிலும்) ஒளிப்பிழம்பை வினாவுதல்

Post a Comment